திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பெண்கள் கபாடி போட்டி இன்று நடைபெற்றது. இந்த பெண்கள் கபடி போட்டியை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
முன்னதாக மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாவட்ட மதுர அணி அமைப்பாளர் பொற்கடி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மண்ணை அரங்கநாதன் சபியுல்லா மற்றும் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர் மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டு ரசித்தனர்.