திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், பின்னர் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் திமுக சார்பில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருச்சி 22 வது வட்ட திமுக சார்பில் வட்டச் செயலாளர் வாமடம் சுரேஷ் தலைமையில் திமுக மாநில மருத்துவ அணி தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன் திமுக கொடியை ஏற்றி வைக்க முன்னாள் பகுதி செயலாளர் கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாநகர அவைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் 22 வது வட்டக் கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம் காளிமுத்து ரங்கநாதன் மார்த்தாண்டன் அன்பழகன் உசேன் சிவக்குமார் பாஸ்கர் மூர்த்தி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி பீமநகர் மாசிங்பேட்டை 52-வது வட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.