திருச்சி வயலூர் மெயின் ரோடு சாந்தாசீலா நகர் லாவண்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் எனக்கு பிறந்தநாள் கொண்டாட பணம் தருமாறு அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டினார்.
.இது குறித்து மருதமுத்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிந்து, இது தொடர்பாக தர்மராஜ் என்கிற தர்மா என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.