மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுகவினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அமமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அமமுக மாநகர மாவட்ட செயலாளருமான மனோகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.