பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு 1,349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீரமுத்தரையர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, நிர்வாகிகள் அவைத் தலைவர்கள் வக்கீல் ராஜ்குமார், ஆர்.சி. கோபி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஜவஹர்லால் நேரு, கல்லுக்குழி மனோகரன், கருமண்டபம் நடராஜன், எடத்தெரு சந்திரன், பெப்சி பால்ராஜ், தாயார் சீனிவாசன்,மகளிர் அணி கலா, மாவட்ட துணைச் செயலாளர் வசந்தி,ஸ்ரீரங்கம் துரை, ராதா கிருஷ்ணன், ராமச்சந்திரன், செங்கல் மணி, ஏ.டி.சேகர்,ராஜா முகமது, சுதாகர், ஷாஜஹான், மலைக் கோட்டை விஸ்வா, வைத்தியநாதன், அருணாச்சலம், கணேசன், சந்துரு, பிரதீப் உள்ளிட்ட மகளிர், மாவட்ட, அணி, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்:- திருச்சி மண்டலத்தை தலைமை இடமாகக் கொண்டு மாமன்னர் பேரரசு பெருமிடுகு முத்தரையர் ஐயா அவர்கள் 1349 வது பிறந்த நன்னாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு பேரரசர் எந்த நிலையில் நின்று தர்மத்தின் வழியாகவும் நீதி பரிமாறல் வழியாகவும் ஆட்சி நடைமுறையை கையாண்ட விதம் அவருக்கு பின்னாலே வருகின்ற பொறுப்பில் இருக்கின்ற அரசர்கள் மன்னர்கள் ஜமீன்தார்கள் இவர்கள் எல்லாம் மக்களின் நலன் நாடுகிற விதத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழகத்தில் பெரும் எடுத்துக்காட்டாக பெரும்பிடுகு ஐயா அவர்கள் விளங்கினார்கள் என்பதுதான் வரலாறு. இந்த வரலாற்றை நாம் உற்று நோக்கினால் அவருடைய வழிகளில் நடந்தால் தமிழர்கள் மட்டுமல்லாமல் மற்ற அண்டை மாநிலங்களிலும் அந்த வழியை பின்பற்றுகின்ற மிகப் பெரிய பரிணாம வளர்ச்சியை தமிழகம் பெறும் என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் இந்த உலகம் உள்ளளவும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கும் இறுதியான தீர்ப்பை பெற்றுத் தந்த ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான் என்பதை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். அமராவதி நீர் காவிரியில் சேர்வதால் காவிரி நடுமன்றத் தீர்ப்பு உள்ளடக்கியதாக இருக்கிறது.காவிரிக்கு வந்து சேரக்கூடிய நீரை யார் தடுத்தாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஏற்புடையதல்ல என்பதுதான் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், முத்திரையர் சங்கங்களை சேர்ந்தவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு ஒத்தக்கடை பகுதியிலும் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்