மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக’- மேகதாது அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கியதை மறு பரிசீலனை செய்யக் கோரியும், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராமல் தடுத்து மேகதாது அணைக்கட்ட அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யக் கோரியும்,

தமிழ்நாட்டின் பாரம்பரிய காவிரி தண்ணீர் உரிமையை பாதுகாக்க சட்ட வல்லுநர்களை கலந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வேளாண் உணவு உற்பத்தி காப்பாற்ற கோரியும், டெல்டா உள்ளிட்ட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரத்தை பறித்து பாலைவனமாக்குவதை தடுத்திட கோர்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
