கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போரில் ஈடுபட்டது.
60 நாட்கள் நடைபெற்ற இந்த போர், கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின் ஜூலை 26 நாள் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் நாள் கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவு தூணுக்கு முதல்வர், கலெக்டர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவரும் முன்னாள் ராணுவ வீரருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெண்கள் மலர் வளையத்தை ஏந்தி பேரணியாக வந்து மேஜர் சரவணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.