இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள காப்போம் பேரணி தொடர்பான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் கரூர் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மண்டல செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இந்திய ஒன்றிய அரசு, பாசிச பாஜக அரசு ஆட்சியை பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டத்திற்கு எதிரான சட்டபூர்வமான வடிவில் தாக்குதலை நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் சட்டம் 370 நீக்கம் யூனியன் பிரதேசங்களை உடைத்தது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றம், வக்பு திருத்தச் சட்டம் எனஅடுத்தடுத்து இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றாலும் கூட தாக்குதலாகும் அரசமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சு. அரசமைப்பு கோட்பாடில் முக்கியமான கோட்பாடு மதச்சார்பின்மையாகும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதனை சிதைக்கும் வகையில் சட்டத்தை எதிர்த்து போகும் வழியில் பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த செயல் திட்டங்களும் ஒன்றுதான் வக்பு திருத்த சட்ட நிறைவேற்றம். , சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்ததோடு மதச்சார்பபின்மை காப்போம் என்று அழைக்கவும் மே 31 தேதி பேரணி நடைபெற உள்ளது.

மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இந்த மக்கள் திரள் எழுச்சி பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.அன்மையில் வடகாடு பகுதியில் சமூகத்தில் குடியிருக்கும் சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தினர் அதை கண்டிக்கிறது 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.உயர் நீதிமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப் பட்டுள்ளது.வருகிற 19ஆம் தேதி மாலை புதுக்கோட்டையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல அடக்குமுறைக்கு உள்ளாகும் வன்னியர் சமூகத்திற்கும் இது பொருந்தும்.  உலகத்தில் எந்த மூலையில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கு விடக்கூடாது முடங்கி விடக்கூடாது என்று சொல்கிற அரசியல் விளக்கமாக அந்த புழக்கத்தை சாதிய முழக்கமாக குறித்து பார்க்கிறார்கள் அது அவர்களது அணுகுமுறை என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்டசெயலாளர் புல்லட் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *