மணிப்பூர் மற்றும் அரியானாவில் நடைபெற்று வரும் மத கலவரத்தை தூண்டிவிடும் பாஜகவையும் மோடியையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரக்கடை அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா. லெனின் மலைக்கோட்டை பகுதி செயலாளர் தலைமை வகித்தார் ஸ்ரீதர் மாநில குழு உறுப்பினர், ராஜா மாவட்ட செயலாளர் ரங்கராஜன், வெற்றி செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் இப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்