அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு SRMU சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்டம் பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் எஸ் ஆர் எம் யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்திட கோரியும், அவுட் சோர்சிங்/ஆட்குறைப்பு முயற்சிகளைக் கைவிட கோரியும், காலி இடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும், 8″CPC அறிக்கைக்காக காத்திராமல் 50% DA ஐ உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் இணைத்திட கோரியும், NPS/UPS ஐ ரத்து செய்! மீண்டும் OPS வழங்கிட கோரியும், 01.01.2023 முதல் அனைத்து கேட்டகிரிகளுக்கும் CRC பதவி உயர்வு வழங்கிடவும், IRT பதிவு செய்தோருக்கு இடமாற்றல் உத்தரவு வழங்கிட கோரியும், 4 பஞ்ச் பயோமெட்ரிக் என்ற பெயரால் வொர்க் ஷாப் தொழிலாளர்களைத் துன்புறுத்தாதே

மேலும் பயோ மெட்ரிக்கை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டுவரும் முடிவைக் கைவிட கோரியும், அனைத்து கேட்டகிரிகளுக்கும் 8 மணி நேர வேலையை உறுதி செய்யவும், லோகே பைலட் / கார்டுகளின் வேலை நேரத்தைக் குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் (Calender Day) ஓய்வினை கட்டாயம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்