ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழாவையொட்டி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி மைதானத்தில் கடந்த 6- வாரங்கள் பயிற்சி முடித்த தலைமை காவலர்கள் சார்பில்
1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது தெற்கு ரயில்வே துணை தலைமை பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தலைமையில் மரக்கன்றை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், தலைமை காவலர்கள், படை அங்கத்தினர்கள் என அணிவகுத்து வந்து தங்களுக்கு உரிய இடத்தில் நின்று 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மண்டல பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி முதல்வர் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரயில்வே பாதுகாப்பு படையின் 36 – ஆம் ஆண்டு எழுச்சி நாளையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 37 பேர் ரத்ததானம் செய்தனர் இதில் 32 ஆண் வீரர்களும் இரண்டு பெண் வீரர்களும் மற்றும் 3 அதிகாரிகள் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர்.