திருச்சி மாவட்டம், பொன்மலைப் பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நிஜாமுதீன் என்பவர் மூன்று சக்கரம் பொருத்திய சைக்கிள் வண்டியைப் பயன்படுத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலகாரம் விற்று வந்தார். அவர் தனக்கு உதவி தேவைப்படுகிறது என இன்ஸ்டகிராமில் காணொளி பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த ராகவா லாரன்ஸ் *மாற்றம்* அமைப்பு சார்பாக பல உதவிகள் செய்து வரும் மாற்றம் சிவா என்பவர் தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி நிஜாமுதீன் அவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கி உதவினார்.
இந்நிகழ்வில் ரெளத்ரம் பசுமை அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.