காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், எதிர் கட்சிகளின் குரலை நசுக்க துடிக்கும் பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட வெல்பேர் கட்சியின் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிராஜ்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில்நாதன், மாநகர காங்கிரஸ் பொருளாளர் ராஜா நசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் வெல்பேர் கட்சியின் செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் முகமது யாசீன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.