தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசனவாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையும், ஏரி குளங்கள் நிரம்பாமல் தற்போதும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இதனிடையே அண்டை. மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூருக்கு வந்த அதிகப்படியான உபநீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்தது, நீர்ஆதாரத்தை பாதுகாக்கவும், வருடம். தோறும் கடலில் சென்று வீணாகும் காவிரிநீரை சேமித்துவைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முன்னாள் முதல்வர் காமராஜன் தெரிவித்தபடி ராசிமணலில் தமிழக அரசு புதிய அணைகட்ட வலியுறுத்தியும், தமிழகத்தில் சம்பா சாகுபடி தொடங்கவுள்ளநிலையில், வரிசைநடவு செய்யும் விவசாயிகளுக்கு கடந்த ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டுவந்த மானியத்தை தற்போதைய தமிழக அரசு நிறுத்தியநிலையில், இயந்திரநடவுக்கு வழங்குவதுபோன்று வரிசை நடவுக்கும் தமிழக அரசு மானியம் வழங்கிடவேண்டும் மேலும் மேலவாழை கிராமதில் குடியிருக்கும் விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கு வீட்டுமனைபட்டா வழங்கிடகோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலம் ராசிமணலில் அணைகட்ட வலியுறுத்தி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நேப்பியர் பாலம் அருகே உள்ள தடுப்புச் சுவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டது அதனை உடனே சரி செய்து புதிய தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு தரைமட்ட பாலமோ அல்லது உயர் மட்ட பாலமோ அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதனையும் நிறைவேற்றி தர வேண்டும் அதை நிறைவேறும் பட்சத்தில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் மேலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு எளிதில் செல்லக்கூடிய வகையில் இந்த பாலம் அமையும் என்றார்..