உலகம் முழுவதும் பொதுவாக மனிதர்கள் காணவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்பதற்காக பத்திரிகைகள் மற்றும் டிவியில் விளம்பரம் கொடுத்தும் மற்றும் அந்தப் பகுதி முழுவதும் காணவில்லை என்ற தலைப்பில் போஸ்டர் அடித்து தொலைத்த வர்களையும், தொலைந்து போனவர்களையும் கண்டுபிடித்து தரக்கோரி அந்தப் பகுதி முழுவதும் போஸ்டர் அடிப்பார்கள். கண்டுபிடித்து தருபவருக்கு அன்பளிப்பு தொகையும் அறிவிப்பு செய்வார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சென்னையை சேர்ந்த ஹரி என்பவர் தன் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனைக்கு லட்டு என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 1-ம் தேதி லட்டு தொலைந்து விட்டதா அல்லது திருடப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. இதனால் லட்டு (பூனை) மீது அன்பு கொண்ட ஹாரி என்பவர் அதனை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்பதற்காக காணவில்லை என்ற போஸ்டர் அடித்தும் அந்த போஸ்டரில் தனது செல்லப் பிராணியான பூனையின் பெயர் லட்டு என்றும் அதன் மூக்கு மற்றும் வால் பகுதி வெள்ளையாக இருக்கும் என்ற நிறத்தையும் குறிப்பிட்டு அந்தப் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனை கண்டுபிடித்து அவர்கள் தனது அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிராணிகள் மீது அன்பு செலுத்தி வீட்டில் வளர்த்து வருபவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.