உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்புகள் மகளிர் தினம் கொண்டாடி வருகின்றனர்திருச்சி மாவட்டத்தில் லியோ பார் புவர் பீப்பிள் டிரஸ்ட் இயக்குனர் ருபினா கிறிஸ்டி மற்றும் மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ் ஆகியோர் தலைமையில்திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் அரங்கில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது,
விழாசிறப்பு விருந்தினர்மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவகர், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாகமாநில பொதுக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ்ராணா டிஜிட்டல் ஹீட் இந்தியா நிறுவனத் தலைவர் ராஜா,வழக்கறிஞர் ஜெயந்தி ராணி,கங்காரு கருணை இல்லம் தீபா ராஜா,புது சுவாசம் அறக்கட்டளை அழகு ரோஜா, சிகரம் அறக்கட்டளை கிரிஜா குமாரி, புது வாழ்வு அறக்கட்டளை உமா,ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் கங்காரு கருணை இல்லம் தீபராஜா, ஹோலி கிராஸ் காலேஜ் உதவி பேராசிரியர்டயானா ரெக்ஸ், மில்லியன் டோஸ் டிரஸ்ட் இயக்குனர் சுஜிதா,வழக்கறிஞர் ஜெயந்தி ராணி,கே.பி.எம். அறக்கட்டளை மும்தாஜ் பேகம் ஆகியோருக்கு சோனியா காந்தி இரும்பு பெண்மணி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது,
மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பம் சுற்றுதல் கவிதை வாசித்தல்உள்ளிட்ட நிகழ்ச்சிநடைபெற்றது, இதில் மகளிர் அமைப்புகள் சமூக அமைப்புகள் உள்ளிட்டர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்