நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் மாநில சிறுபான்மை பிரிவு மூத்த துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு பேட்ச் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.