இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மக்கள் அதிகாரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாநிலப் பொதுச் செயலாளர் கோவன், ஏ.ஜ.டி.யு.சி ன் பொதுச் செயலாளர் சுரேஸ், வழக்கறிஞர் ஆதிநாராயண மூர்த்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரத், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் செழியன் சிறப்புரையாற்றினார்.
மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் கார்க்கி, சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நூர்முகமது, சவுகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக மக்கள் அதிகாரத்தின் நகர செயலாளர் மணிமாலை நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.