திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பாதைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளின் விளைவாக கடந்த மூன்று நாட்களில் திருச்சி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் மாநகராட்சி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜா பேட்டை மோட்ச ராகினி கோவில் அருகையும் முதலியார் சத்திரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சற்று தேங்கி செல்கின்றது. அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக கடந்து செல்ல ஏதுவாக அப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கல்லுக்குழி மேம்பாலம் அருகே உள்ள கால்வாயில் மண்டி கிடக்கும் குப்பை கழிவுகளை ஜேசிபி இயந்திர மூலம் அகற்றப்பட்டு வருகிறது மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக கலந்து செல்வதற்காக இப்பகுதி முழுவதும் ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாணி பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாநகராட்சி மேயர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
மேலும் தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் வடிகால் பகுதிகளை தூர்வாரும் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி மாநகராட்சி இந்த மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் தயார் நிலையில் உள்ளது குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்க கூடிய நோய் பரவக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.