திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் வேஸ்ட் பேப்பர் குடோன்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த 42 தொழிலாளர்களை நீக்கிவிட்டு, வடமாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பணியில் பெரு முதலாளிகள் அமர்த்தியுள்ளனர்.இதனால் சுமைப்பணி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை எனக்கூறிவிட்டு வடமாநில தொழிலாளர்களையும், வடமாநில மக்களையும் தமிழகத்தில் குடியமர்த்தும் திராவிட மாடல் ஆட்சியை கண்டித்தும், முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுடன்,
வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தமிழக கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை நசிக்கும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்றைய தினம் சுமைப்பணி தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோரது தலைமையில் 350-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று,
தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருச்சியில் தமிழகத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றினைத்து வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.