அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புத்தூர் பகுதி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றிட திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முத்துமாரி, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தனவேல் சிறப்புரையாற்றி பேசும் பொழுது அதிமுகவை இன்றைக்கு உயிரோட்டமாக எடப்பாடியார் செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணியில் வெளியேற கட்சிகள் காரணம் கண்டுபிடித்து வருகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி அடிக்க எடப்பாடியார் வியுகம் அமைத்து வெற்றி பாதை அமைத்து தருவார். அதிமுக தனிதன்மை உள்ள கட்சி. திமுகவிற்கு தனியாக இருக்க தெம்பு இருக்கிறதா? இளைஞர்கள் கட்சியில் சேர தொடங்கி விட்டனர். இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே திமுகவை விட அதிமுக பெரிய கட்சி. மக்களை தொடர்ந்து சந்திப்போம். 500 நாட்கள் தான் இருக்கிறது. பூத் கமிட்டியை வலுப்படுத்துவோம். அதிமுக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சிக்காக உழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.