திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பா.மாணிக்கம் இல்லத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இந்திரஜித்/மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் முகமது அலி/ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்,
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் பழனிச்சாமி கார்த்திகேயன் நடராஜன் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் பழனிச்சாமி, மக்கள் அதிகாரம் சார்பில் செழியன், ஜீவா, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சம்சுதீனும் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகின்ற 29ஆம் தேதி அன்று திருச்சி அரிஸ்டோ எல்.கே.எஸ் மஹாலில் மாநாடு நடத்துவது என்றும்/ மாநாடு சிறக்க அனைவரும் வேலை செய்வதென்றும்/இந்த மாநாட்டில் தேசிய தலைவர்களை கலந்து கொள்ள வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.