திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ளது அங்கு முன்னாள் மத்திய மந்திரி முலாயம் சிங் யாதவ் முழு உருவ சிலை திறக்கப்படுகிறது இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் யாதவ சமுதாய தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலிருந்து கலந்து கொள்கிறார்கள் முலாயம் சிங் யாதவ் மகனும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஆன அகிலேஷ் யாதவ் லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ் வி யாதவ் உள்பட பலர் பங்கே இருக்கிறார்கள்.
மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்பார்கள் யாதவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் அரசியல் கட்சிகள் அதிகமாக எம்எல்ஏக்கள் எம்பிக்களை யாதவ் சமுதாயத்துக்கு வழங்க வேண்டும். ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்
வீரன் அழகு முத்துக்கோன் வரலாற்றை பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார் அருகில் மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன் பொருளாளர் எத்திராஜ் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வம் ஸ்ரீதர் நிர்வாகிகள் தங்கராஜ் நீலமேகம் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.