திருச்சி பீமா நகர் அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர் தன ஜீர்ணோத்தாரன ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கோயில் முன்பு உள்ள யாகசாலை கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர் அதனைத் தொடர்ந்து அருள்மிகு செடல் மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் கும்பாபிஷேக விழாவானது நாளை ஐந்தாம் தேதி காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம் நடைபெற உள்ளது ஆறாம் தேதி முதல்கால பூஜையும் 7 ஆம் தேதி இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜையும் எட்டாம் தேதி நான்காம் கால பூஜையும் மாலை வேலையில் ஐந்தாம் கால பூஜையுடன் ஒன்பதாம் தேதி சமகாலத்தில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பீமநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.