ஏழிசைத் தென்றல் என் கே டி. தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியாகராஜா பாகவதர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், பரஞ்சோதி, குமார், முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மை சமுதாயத்தை பெரும்பான்மை சமுதாய மக்களுக்கும் தேசபக்தியுள்ள தலைவைகளுக்கும் மணிமண்டபம் அமைத்து அவருடைய பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கின்ற நிகழ்ச்சியை அம்மாவுடைய, எடப்பாடி உடைய அரசு செய்து வருகிறது. 2026 இல் அற்புதமான வெற்றி கூட்டணியை கழகப் பொதுச் செயலாளர் அமைப்பார். முதல்வருக்கு பிறந்தநாள், அவர் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் நன்றாக இருக்கட்டும். அவர் ஆட்சியைப் பொறுத்து வரை வேதனைப்பட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. சீமான் வீட்டு காவலரை கைது செய்வதே நடவடிக்கை பார்க்கும் போது சர்வாதிகார நடவடிக்கையாக பார்க்க வைக்கிறது இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் தான் உண்மையான எதிர்கட்சி என்று ஆதங்அர்ஜுன் சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு தமிழக முழுவதும் பல கோடி தொண்டர்கள் உள்ள கட்சி மிகப்பெரிய கட்சியாக உள்ளது. இதோடு போட்டி போடும் அளவுக்கு எந்த கட்சியும் கிடையாது. திமுகவும் பாஜகவும் முன்னணி கொள்கையில் நாடகமாடுகின்றனர் என்ற கேள்விக்கு* மும்மொழிக் கொள்கை யார் நாடகமாடுவார் என்பதை தெரியாது. இரு மொழிக் கொள்கைதான். அதற்குத்தான் அண்ணா திமுக ஆதரவு கொடுக்கும். மூன்றாவது மொழியை படிக்கலாம். ஆனால் திணிக்க கூடாது. இது கட்சியின் முடிவு அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சியில இல்லாதவர்கள், வெளியே போனவர்கள், கட்சியை விட்டு வேறு கட்சியில் போட்டியிட்டவர்கள், சேர்ந்தவர்கள் எவர்கள் இரட்ட இலை எனக்கு வேண்டும், கட்சி வேண்டும் என கேட்பதற்கு சுப்ரீம் கோர்ட், தொண்டர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள்.
தொடர்பில்லாதவர்கள் கட்சியில் சேர வேண்டும் என்றால் கடிதம் எழுத கொடுக்க வேண்டும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம் இதுதான் கட்சி நடைமுறை. ஆளுங்கட்சி எதிர்த்து கட்சி நடத்துகிற ஒரே தலைவர் அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி தான் திமுக அறிவித்த நீட் தேர்வு அதையே நிறைவேற்றவில்லை சொல்வதற்கு நிறைய உள்ளது எதுவும் . எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லைநான்கு வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள ஒரு லட்சம் கோடி வரி விதித்துள்ளார் 9 லட்சம் கோடி என்ன செய்தார் என்று தெரியவில்லை இந்த ஆட்சி வேண்டுமா? என்ற நிலை பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.திமுக ஆட்சி வீட்டுக்கு போகப்போகிறது, அதிமுக ஆட்சி வரப்போகிறது என தெரிவித்தார்.