தமிழக முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் சுமார் 32,000 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பகுதியான கடைகளில் பெண் பணியாளர்களை பணிபுரிந்து வருகின்றனர் இவ்வாறான நிலையில் மாலை 6 மணிக்கு மேல் நியாய விலை கடை விற்பனையாளர்கள் வீடு வீடாக சென்று E-KYC விரல் ரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படுவதை கண்டித்தும், மேலும் கடந்த ஆண்டு மாநில பதிவாளர் உடன் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வழங்கியும் தற்போது வரை உரிய உத்தரவுகள் பிறபிக்கப்படவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் முத்து துணைத் தலைவர்கள் தங்கராஜ் தர்மலிங்கம் இணை செயலாளர் பெரியக்கான், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நியாய விலை கடை பணியாளர்கள் E-KYC மாலை 6 மணிக்கு மேல் விரல் ரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படுவதை கண்டித்தும் 26 அம்ச கோரிக்கைகள் மீதான உடன்பாட்டில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாதவை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நியாய விலை கடை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வருகிற 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும். மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிப்பது என்பது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.