திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு செயல் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேலும் கோட்டச் செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், லால்குடி கோட்ட அமைப்பு செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகள்.. GDS ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உட்பட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி 12,24,36 வருடங்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வு அமல்படுத்து, 180 நாட்கள் சேமிப்பு, விடுப்பு, பணிக்கொடை, கிராஜிவிட் குருப்பு இன்சூரன்ஸ் தலா 5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். செம வேலைக்கு செம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக ஆன்லைன் மூலம் பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட TRCA உயர்த்தி வழங்கிடு. குறிப்பாக பல ஆண்டுகளாக பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்.
ஊழியர்களுக்கு அதிக பனிசுமையும், மன உளைச்சலையும் கொடுப்பதை கைவிட வேண்டும். இலக்கு நிர்ணயம் செய்து வீடு வீடாக, தெரு தெருவாக கேன்வாஷ் செய் என்று மிரட்டும் டார்கெட் டார்ச்சரை கைவிட வேண்டும் , உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் மத்திய அரசை கண்டித்து டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்ட அஞ்சல் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.