வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அமைப்பு நிலை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த் துறையில் உள்ள கடுமையான பணிச்சூழல், அதிக அளாவிலான விண்ணபங்கள் கையாள ஒரு குறுவட்டத்திற்கு ஒரு துணை வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட வேண்டும், டிஜிட்டல் கிராப் கணக்கைருப்பு பணிகளில் சங்கங்களின் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படை பணிநியமனம் பெறும் வகையில் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், நிலஅளவை துறையில் நியாயமான காரணங்களால் தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்களின் மீது ஆய்வு என்ற பெயரில் கட்டுப்பாடுகளை தவிர்க்க நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரை கேட்டுக் கொள்வது. ஒப்பந்த முறைனயில் பணி நியமனங்களை வருவாய்த் துறையில் கைவிடப்பட வேண்டும உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அபுதாஹிர், சுந்தரராஜன், மணிகண்டன், மகேந்திரகுமார், அருள்ராஜ் இணை ஒருங்கிணைப்பாளர் முனியப்பன், நல்லமுகமது உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.