ஜாக் தலைவர் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஜாக் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் செயலாளர் கண்ணன், பொருளாளர் சசிகுமார், இணைச் செயலாளர் நவந்த கிருஷ்ணன்,
தமிழ்நாடு பார் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரகுமார், குற்றவியல் சங்க தலைவர் சுரேஷ், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து பணியாற்றும் 2400 வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.