திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்ட்டின் ஜெகதீசன் என்பவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள் என்று கூறி வழக்கறிஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனை அடுத்து மார்டின் ஜெகதீசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒசூர் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை வழக்கறிஞர் சீருடையில் நீதிமன்றம் அருகில் கொலை செய்யும் நோக்குடன் கொடுரமாக வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தொடந்து வழக்கறிஞர்கள் கொலை செய்யபடுவதையும் தாக்கப் படுவதையும் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி கோரி இன்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.