மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துகுட்பட்ட அரசங்குடி சக்தி கேந்திரம் சார்பாக அரசங்குடி மந்தையில் வாஜ்பாய் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை பற்றி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பட்டாளரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் முன்னிலை வகித்தார். மற்றும் இந்த நிகழ்வுக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பொது செயலாளர் நந்தா வேங்கூர் கார்த்திக் ஆபாண்டியன் வடிவேல் விஜயகுமார் மனோகரன் எழில்நகர் செல்வராஜ் எழில்நகர் சரவணன் கிளை தலைவர்கள் ஆறுமுகம் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முடிவில் அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கபட்டது