திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னால் சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் நிர்வாகிகள் மத்திய பேசினார். தமிழகத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கவிதைகள் திரைப்பட வசனங்களை ஒப்பிவிக்கும் போட்டி நடத்தபட உள்ளது. இந்த போட்டியில் பள்ளியில் 9, 10 ,11 ,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியரில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிப்பவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கபடும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ரூ. 5000 , இரண்டாம் பரிசாக ரூ 3000, மூன்றாம் பரிசாக ரூ.2000, வழங்கப்பட உள்ளது என்றார்.
மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர் மண்டல அளவிலான தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ 5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000, வழங்கப்படும். மண்டல அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25000, இரண்டாம் பரிசாக ரூ 15000, மூன்றாம் பரிசாக ரூ.10000, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாகை சந்திரசேகர் பேசியது.. மறைந்த திமுக முன்னால் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைகள், வலாற்று நிகழ்வுகளை மக்கள் மத்தியில் எடுத்த செல்ல திமுக கலை, இலக்கிய அணியின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணிகளின் வாயிலாக பொதுமக்களை சென்றடையும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தபட உள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் கருணாநிதி மக்களுகாக ஆற்றிய தொண்டுகள், திட்டங்கள், செயல்முறை ஆகியவற்றை விரிவாக எடுத்து உரைக்கும் வகையில் பல போடிகளும் நடக்க உள்ளது. வாரியத்தில் 21 திட்டங்கள் உள்ளது எந்த ஒரு திட்டங்களும் கடந்த 10 ஆண்டுகளில் கலைஞர்களுக்கு கிடைக்கவில்லை தற்போது தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களுக்கும், அடையாள அட்டை வைத்துள்ள கலைஞர்களுக்கு அனைத்து திட்டங்களும் கூடிய விரைவில் வழங்கப்படும், கலைஞர்களின் உறுப்பினர் சேர்க்கை மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் , ஒரு கலைஞர் மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி , ஆகியோர்களை பற்றி ஆபாசமாக பாடல் பாடியது வன்மையாக கண்டிக்கதக்கது. மேலும் இந்த செயலின் போது கைத்தட்டி சிரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.