144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளாவின் நிறைவு நாளான இன்று, சிவன் ராத்திரி நன்னாளில் விசுவ ஹிந்து பரிசத் தென் தமிழ்நாடு சார்பாக ஐந்து சிவாலயங்களுக்கு பாதயாத்திரை ஆக சென்று அர்ச்சனை பொருட்களை வழங்கி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி இந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து நாகநாத சுவாமி கோவில், பூலோகநாதர் சுவாமி கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், எறும்பீஸ்வரர் கோவில் மற்றும் திரு நெடுங்குள நாத சுவாமி கோவில் ஆகிய ஐந்து சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விசுவ ஹிந்து பரிஷத்தின் (வட, தென்) தமிழ்நாடு தர்ம பிரசார் அமைப்பாளர் ஸ்ரீமான் சேதுராமன் ஜி தலைமையில், மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், விபாக் பஜ்ரங்தள் பொறுப்பாளர் சப்தரிஷி , மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி, மாவட்ட இணை செயலாளர் யுவராஜ் மற்றும் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் பாஜக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் நந்தா முன்னால் திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் ஆர்.பி.பாண்டியன்
திருவெறும்பூர் நகர் மண்டல் துணை தலைவர் மனோகரன் ப்ரகண்ட், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு மலைக்கோவில் திருவெறும்பூர் பஸ்நிறுத்தத்தில் வரவேற்பு கொடுத்து சிறப்பித்தனர் . இந்த நிகழ்ச்சி இனி வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. மொத்தம் 26 கிலோமீட்டருக்கு இந்த சிவாலய பாதயாத்திரை நடைபெற்றது.