திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் நெல்லுகுத்தியார் சிலம்பாட்ட சங்கம் உள்ளது. சங்கம் ஆறாவது தலைமுறையாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சரவணகுமார் பயிற்சியாளராக இருந்து வருகிறார். நான்கு வருடமாக சிலம்பம் குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பாட்ட கலைகளை கற்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ மாணவிகள் மாவட்டம், மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் சர்வதேச அளவில் ஆசிய சிலம்போட்ட போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர்.

இதில் நெல்லுகுத்தியார் சங்கத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சிறப்பாக விளையாடி ஆண்கள் பெண்கள் என இரு பிரிவிகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பதக்கங்கள் பெற்று வென்றுள்ளனர். இவர்களுக்கு திருச்சி நெல்லுகுத்தியார் பயிற்சியாளர் மட்டுமல்லாமல், பெற்றோர்களும் உற்சாக வரவேற்பு அளித்து நெல்லுகுத்தியார் சிலம்ப போட்டியின் முதல் நான்கு தலைமுறை பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாங்கள் சர்வதேச அளவில் ஆசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற பதக்கங்கள் சான்றிதழ்களை வைத்து பூஜை செய்து தங்களது பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து மாணவ மாணவிகள் கூறும்போது…தாங்கள் சிலம்பத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நான்கு வருடத்திற்கு மேலாக பயிற்சி பெற்று வருகிறோம். எங்களது பயிற்சியாளர் கொடுத்த பயிற்சியினால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வெற்றி பெற்று உள்ளோம் மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாங்கள் பங்கேற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து பயிற்சியாளர் கூறும்போது. தங்களுக்கு போதுமான இட வசதி நிதி வசதி இல்லாமல் ஆசிய சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இது எங்கள் நெல்லுகுத்தியார் ஆசான்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், மேலும் நிதி வசதி இட வசதி இருந்தால் சர்வதேச அளவில் தங்களது மாணவ மாணவிகளை அழைத்து சென்று வெற்றி பெறுவோம் இதற்கு அரசும் பல்வேறு தரப்பினரும் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *