முன் முதல் கடவுள் விநாயகரின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் சன்னதி என இரண்டு சன்னதிகளில் தலா 75 கிலோ எடையுள்ள 150 கிலோ எடையுள்ள மேகா கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு கடந்த 2004 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது அதே போன்று இந்த வருடம் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் தலா 75 என 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை ஆனது தற்பொழுது படைக்கப்பட்டு வருகிறது. இந்த கொழுக்கட்டையில் அரிசி மாவு, வெள்ளம், பொட்டுக்கடலை, எள் போன்றவை சேர்த்து மடப்பள்ளியில் தயாராகப்பட்டு மடப்பள்ளியில் இருந்து தற்போது எடுத்துவரப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகர்க்கும் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

பெறுவாயாக பத்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர் இதையொட்டி காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைப்பது வழக்கம் இந்நிலையில் இந்த வருடம் திருச்சி மாநகரில் 242 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சிலையை 9 ஆம் தேதி கரைக்க உள்ளனர் இதற்காக மாநகர் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *