ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாக கருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே கோயில்களில் அதற்கான சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக 22 ஆம் ஆண்டு மாபெரும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

அதனை ஒட்டி 11 அடி உயரமுள்ள தூண்டுகை விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகருக்கு காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று ஸ்ரீ செல்வ விநாயகர் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தில் இளைஞர் குழுவினர் தெருவாசிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *