இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,
மாணிக்க விநாயகருக்கும், உச்சி பிள்ளையாருக்கும் இன்று பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சிவிநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்பட்டது. இதில் மக்கள் ஏராளமனோர் கலந்துக்கொண்டனர். குறிப்பாக இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது.
மேலும் பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த திருவிழா இன்று தொடங்கி 14- தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இதனை தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை 4-00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி,
குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும் ஆண்டு தோறும் மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.