பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து அரசு துறைகளிலும் தலை விரித்தாடும் ஊழல் ஆகியவற்றை கண்டித்தும் இவற்றை கண்டு காணாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் மாநகர், வடக்கு,தெற்கு, மாவட்ட அதிமுக சார்பில் மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் தாங்கினார். ஆர்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி,
அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்சீனிவாசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.