திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது
பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை மறைத்து அதை விளையாட்டு பொம்மை, ஜீப், கூண்டு ஆகியவற்றில் வைத்து கடத்தி வந்துள்ளார். அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 216.500 கிராம் அதன் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.