திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக வனத்துறை அதிகாரி பங்கேற்காதது குறித்து கலெக்டர் பிரதீப் குமார் வனத்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது வனத்துறை அலுவலர்கள் எழுந்து நின்று அதிகாரி வரவில்லை என பதிலளித்தனர். இதனை கேட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஏற்கனவே நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய நிலங்களில் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இந்த மனுவிற்கான உரிய பதிலை வனத்துறை அதிகாரி அளிக்காமலும், கூட்டத்தில் பங்கேற்காமலும் இருந்துள்ளார். எனவே இந்த கூட்ட அரங்கை விட்டு வனத்துறை அலுவலர்களாகிய நீங்கள் வெளியேறும் படி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை கண்ட விவசாயிகள் கைகளை தட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. .