தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 7 – வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது..
தொடர்ந்து 7- வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விவசாயிகளின் நலன்கள் எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதே போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும். இன்று தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், இன்னமும் அரசு மெத்தனப் போக்கில் செயல்பட்டால், பூச்சி மருந்து குடித்து சாகும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.