திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது இந்த குறைதீர்க்க கூட்டத்திற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மேல குழுமணி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
திருச்சி ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குழுமணி ஊராட்சி மேல குழுமணி பகுதியில் கடந்த பல வருடங்களாக வசித்து வருகிறோம் மேலும் நாங்கள் அட்டவணை பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் தலைமுறை தலைமுறையாக இப்பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம் நாங்கள் வாழுகின்ற வீட்டிற்கு குழுமணி ஊராட்சியில் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்தி வருகிறோம்.
நாங்கள் குடும்ப அட்டை வைத்திருந்த போதும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்கள் கோரிக்கையை பரிசோதனை செய்து பட்டா வழங்கிட கோரி மனு அளித்தனர்.