திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியை 236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் அதற்கான பூமி பூஜை விழா இன்று பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி செங்கல் எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், மற்றும் மாமனார் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறுகையில்.. புதிதாகத் திறந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வருவதாகவும் கடைகள் மற்றும் பணிகள் டெண்டர் வேலைகள் நடப்பதால் அதனை ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் மேலும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கும் எனவும், கரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டம் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்தார்,
வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், இயங்கும் அதே போன்று புதிய பேருந்து நிலையம் இயங்கும் என தெரிவித்தார், பேருந்துகள் கட்டண உயர்வு என்ற கேள்விக்கு.. கட்டண உயர்வு இருக்காது கிலோமீட்டர் மற்றும் ஸ்டேஜ் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணங்கள் இருக்கும் என தெரிவித்தார். வீட்டு வரி உயர்வு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் ஏற்கனவே இருந்த வீட்டு வரியை மட்டும் தான் வசூல் செய்ய உத்தரவிட்டதாகவும் என தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்