திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாபகரமாக அடக்கி தமிழர் வீரத்தை நிலை நாட்டினர்.
சூரியூரில் நடந்த இந்த பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை பார்ப்பதற்காக இத்தாலி மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டினர் ஆர்வமுடன் கண்டு வசித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்