2024 18வது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமிழகத்தில் விருப்ப மனுவை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி உறையூர் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் ராஜேந்திரன் தன்னுடைய விருப்ப மனுவை தாக்கல் செய்தார். மேலும், வேட்பாளர்கள் வைப்பு தொகையாள செலுத்த வேண்டிய 25ஆயிரம் ரூபாய் பணத்தை தனது கடன் வங்கி அட்டை மூலம் செலுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் வைப்பு தொகையை செலுத்தும்படி தெரிவித்தார்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுயேட்சை வேட்பாளரான ராஜேந்திரன் அரசு இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என கூறி வருகிறதுகூறி வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஏன் டிஜிட்டல் முறையை பயன்படுதவில்லை தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து பெரிய கடைகள் வரை சாதாரணமாக டிஜிட்டல் முறையை கையாளும் போது வேட்பாளர் விண்ணப்பத்திற்கு டெபாசிட் தொகையை ஏன் டிஜிட்டலில் பெறகூடாது. நான் என்னுடைய வங்கி கடன் அட்டை மூலம் பணம் செலுத்த தயாராக இருக்கிறேன். ஆனால், நடத்தும் அலுவலரோ பணத்தை பெற்றுக் கொள்ள வசதி இல்லை என கூறுகிறார். தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை வேட்பாளர்கள் இடமிருந்து பெற டிஜிட்டல் முறையை பயன்படுத்தி பணத்தை பெற்று கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.