தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள். இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்” என அறிவித்தார். அதன் அடிப்படையில். இந்த பண்பாட்டு பயணம் ”வேர்களைத் தேடி” என்ற பெயரில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் சுற்றுலாத்துறை. கலை & பண்பாட்டுத்துறை. இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த அயல்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய் திருநாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில் வேர்களைத் தேடி எனும் திட்டத்தின் கீழ் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டு கலாச்சாரப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பயணம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் மற்றும் கல்லணை அணை ஆகிய பகுதிகளை பார்வையிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், .பழனியாண்டி, அப்துல்சமது, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *