நாளைய தினம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு உலகத்தில் எங்கும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று நள்ளிரவு பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு சென்று வணங்குவார்கள். நேற்றைய தினம் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாண்டு நள்ளிரவில் தரிசனம் கோவில்களுக்கு தடையில்லை என்று கூறியிருந்தார். இதனால் பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
கிறிஸ்தவ மக்களுக்கு சோகமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று இரவு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்படி ஒமைக்ரான் காரணமாக புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு வேளாங்கண்ணி செல்ல எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கும் இத்தகைய அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.