நீர் ஆதார நலத்திட்ட மேலாண்மை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் யோகநாதன் வரவேற்புரை ஆற்றிட தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் குருசாமி தலைமை தாங்கினார். ராஜாராம் முன்னிலை வகித்தார். மேலும் கடந்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை பிரதிநிதிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் தொடர் நடவடிக்கையாக திருச்சியில் இந்த மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- தமிழ்நாட்டில் உள்ள 37ஆற்று படுகை களையும் ஒருங்கிணைத்த குறுவடிநில பகுதிசார் தற்சார்பு நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்றுவது மூலம், ஏற்கனவே உள்ள சுமார் 39,000 நீர்நிலைகள் போக 200 டி எம் சி கூடுதல் கொள் அளவுக்கு 200 நீர்நிலைகளை நிர்ணயம் செய்து 2025-2026 நிதி ஆண்டில் பிரத்யேக திட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல் வேளாண் விளைபொருள் ஆதாய விலை நிர்ணய சட்டம் இயற்றி , சந்தையில் அரசு நிர்ணயித்த விலைக்கு குறைவாக விற்கும் நிலையில் அந்த விலைக் குறைவை ஈடுகட்டும் வகையில் அரசின் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திட வேண்டும். மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும்,பொது கொள்கை வரைவுகளில் அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் தகுதி உடைய மக்கள் சமூக அமைப்பு ( CIVIL SOCIETY ORGANISATION) ஒன்றை பிரகடனம் செய்வது. கன்னியாகுமரி மாவட்டம் முல்லை ஆறு முதல் திருவள்ளூர் மாவட்டம் கொசத்தலையாறு முடிய 37 நதிப் படுகைகளில் தொடர் பிரச்சாரத்தை நடத்துவதன் மூலம் தமிழகத்தில் குறுவடிநில பாதுகாப்புக்கு தமிழக முதல்வர் அவர்களை காவேரிப் பாசனத் தலைவர் மகாதானபுரம் ராஜா ராம் அவர்கள் தலைமையில் சந்திப்பது. மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவந்து தனியார் விவசாயம் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பணியாற்றும் 30 குழுக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் . மேலும் கூட்டத்தின் இறுதியாக தமிழக சிவில் சொசைட்டி அமைப்பு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.