தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று கோரியும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி துப்பாக்கிச் சூடு நடத்திய கிரிமினல் குற்றவாளிகளான போலீசார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் கார்க்கி தலைமை தாங்கினார். கண்டன உரையை மக்கள் கலை இலக்கியக் கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைவர் சின்னதுரை, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், தஞ்சை மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தேவா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் காவிரி நாடன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் லதா,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட இணை செயலாளர் மணலி தாஸ், திருச்சி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் தோழமைக் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.