ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் EDU ARENA என்ற பொருண்மையில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 26.11.2025 மற்றும் 27.11.2025 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் இரண்டாம் நாள் நிறைவு விழாவில் இந்தியா தெற்கு மண்டல பயிற்சி வாரியம் உயர்கல்வித்துறை இயக்குநர் விஜயசங்கர் பாண்டே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அவர்தம் சிறப்புரையில் இன்றைய நவீன உலகில் மாணவர்கள் தங்களின் அறிவியல் சிந்தனையை வலுப்படுத்திக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் அப்போதுதான் சிரிய வளர்ச்சியை அடையமுடியும் என்று கூறி போட்டிகளில் பங்குபெற்ற மாணவிகளை வாழ்த்தினார்.

முன்னதாக உயிர் அறிவியல் துறை முதன்மையர் மற்றும் இந்திகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி.ஸ்ரீநான் அவர்கள் வரவேற்புரையாற்ற இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் கவிதா அவர்கள் நிகழ்வு குறித்த தொகுப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தி தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் திரு.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களையும் போட்டிகளில் பங்குபெற்று கற்றுக் கொண்டவர்களையும் வாழ்த்தினார்.

நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 52 பள்ளிகளில் இருந்து 1408 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் வெற்றிபெற்று ரொக்க பரிசையும் சான்றிதழ்களையும் பெற்று பயனடைந்தனர். நிகவின் இறுதியாக உயிர் அறிவியல் துறைத்தலைவர் முனைவர் சித்ரா அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழா, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மூலம் ஆக்கபூர்யமான வளர்ச்சிக்கு இன்றைய இளைய தலைமுறையை வழிநடத்த ஏதுவாக அமைந்தது.
